Blog

தமிழைச் சிதைத்தால்

28/10/2013 22:08

இழிச் சொல் சொன்னாய் - பொறுத்துக் கொண்டேன்...

காரி உமிழ்ந்தாய் - துடைத்துக் கொண்டேன்...

தேடியச் செல்வம் அழித்தாய் - திகைத்து நின்றேன்...

எட்டி உதைத்தாய் - வாங்கி கொண்டேன்...

விழுந்தும் மிதித்தாய் - ஏற்றுக் கொண்டேன்...

என் தாயைப் பழித்தாய் - நெஞ்சம் கலங்கி நின்றேன்...

நீ இத்தனைச் செய்தும் நான் சகித்துக் கொண்டேன்...

ஆனால்...... என் தமிழைச் சிதைத்தால்-

உன்னை அடித்துக் கொல்வேன்!!!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

 

—————

மனிதனும் மட்பாண்டமும்

14/08/2013 22:48

குயவன் கையிலே மட்பாண்டம் போலவே,

கடவுள் எனும் கயவன் கையிலே மனிதர்கள் நாமே!

களிமண்ணுக்கு வடிவம் கொடுப்பது குயவனின் இஷ்டம்,

நாமும் கடவுள் கையிலே சிக்கிக்கொண்டு பட்டோமே கஷ்டம்!

தவறி விழுந்த மட்பாண்டம் இழந்துவிடும் வடிவம்,

நம் உடலை விட்டு உயிர் போனால் வந்துவிடும் முடிவும்!!!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

—————

வாழ்வு

25/06/2013 15:00

வரவு செலவு கணக்கல்ல வாழ்வு

இன்ப துன்ப தொகுப்பல்ல வாழ்வு

வெற்றித் தோல்வி இலக்கல்ல வாழ்வு

நேசப்ப பாசப் பிணப்பல்ல வாழ்வு

ஆசை இச்சை ஈர்ப்பல்ல வாழ்வு

கடந்து போகும் நாட்களல்ல வாழ்வு

விரைந்து ஓடும் நிமிடமல்ல வாழ்வு

உறவு உரிமை இணைப்பல்ல வாழ்வு

பகலிரவு மாற்றமல்ல வாழ்வு

தங்கம் வெள்ளி தேடலல்ல வாழ்வு

காதல் போயின் சாதலல்ல வாழ்வு

ஊண் உறக்கம் மட்டுமல்ல வாழ்வு

ஓயாத போரல்ல வாழ்வு

தீராத நோயல்ல வாழ்வு

ஆறாத காயமல்ல வாழ்வு

வளராத விதையல்ல வாழ்வு

புலராத பொழுதல்ல வாழ்வு

நாளை என்ற நம்பிக்கையே வாழ்வு....

 

ஆக்கம்,

பா.சந்திரன்

—————

விழிகள்

05/08/2012 21:53

உன் விழிகளைக் கண்டேன்!

என் வழிகளை மறந்தேன்!

கூரிய வாலிலும் கொடியது உன் விழியடி!

நீ கூறிய வார்த்தையில் நெஞ்சத்தில் அடிதடி!

உன் விழிகளுக்கும் உண்டு மொழியடி!

அதனால் வந்தது எனக்கு பிணியடி!

 

உன்னால் தொலைந்தது என் தூக்கம்!

அந்தி பகல் மனதில் ஒரே ஏக்கம்!

உன்னை அடைவதே எனது நோக்கம்!

வேறெதுவும் தரவில்லை இந்த தாக்கம்!

 

கொசு வலையா? மீன் வலையா?

இப்படி சிக்கிக் கொண்டேனே உன் விழிகளில்!

 

என் காதலைச் சொல்வதற்கு ஒரே கூச்சம்!

சொல்லாவிட்டால் எனக்கேது மோட்சம்?

 

ஆக்கம்,

பா.சந்திரன்

—————

சொன்னார்கள் அன்று! சொல்கின்றேன் இன்று!

24/07/2012 00:03

 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்!

சொன்னார்கள் அன்று!

சித்திரம் உன் கைவசமானால் சுவரையும் வரைய முடியும்!

சொல்கின்றேன் இன்று!

 

ஆமை புகுந்த வீடு உருப்படாது!

சொன்னார்கள் அன்று!

மனிதன் வீடு புகுந்த ஆமை உருப்படாது!

சொல்கின்றேன் இன்று!

 

அன்பான நண்பனை ஆபத்தில் அறி!

சொன்னார்கள் அன்று!

ஆபத்து வந்ததே அன்பான நண்பனால்தான் என்று அறி!

சொல்கின்றேன் இன்று!

 

ஆழம் அறியாமல் காலை விடாதே!

சொன்னார்கள் அன்று!

காலை விடாமல் ஆழம் தெரியாது!

சொல்கின்றேன் இன்று!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

—————

மௌனம்

23/07/2012 23:55

 

ஊமை, மொழியின் மௌனம்!

வெறுப்பு, அன்பின் மௌனம்!

ஏழ்மை, செல்வத்தின் மௌனம்!

மொட்டு, பூக்களின் மௌனம்!

தோல்வி, வெற்றியின் மௌனம்!

தியானம், மனதின் மௌனம்!

குருடு, பார்வையின் மௌனம்!

துக்கம், ஆனந்தத்தின் மௌனம்!

பிணி, ஆரோக்கியத்தின் மௌனம்!

சுழியம், எண்களின் மௌனம்!

சூன்யம், பிரபஞ்சத்தின் மௌனம்!

அமாவாசை, நிலவின் மௌனம்!

நிசப்தம், ஒலியின் மௌனம்!

இருள், வெளிச்சத்தின் மௌனம்!

துரோகம், நம்பிக்கையின் மௌனம்!

விரோதம், நட்பின் மௌனம்!

அழுகை, சிரிப்பின் மௌனம்!

பிளவு, ஒற்றுமையின் மௌனம்!

இறப்பு, உயிரின் மௌனம்!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

 

—————

என்று மாறும் நம் தலையெழுத்து?

14/07/2012 18:23

ஆதியும் அந்தமுமில்லா சோதியின் சொரூபமான

பரம் பொருளின் தாழ்பணிந்து!

என் தாயின் தாயான உயிர்மொழி, செம்மொழி, எம்மொழி,

தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து!

காடுகள் மலைகளெல்லாம் அந்தி பகல் பாராமல்,

சோம்பல் அதைத் தீண்டாமல், தினம் உழைத்து!

இரத்தமதை வியர்வையாக்கி, வியர்வையதை உரமாக்கி,

உயர்வு எனும் பயிர் வளர்த்து!

கொண்ட கொள்கை மாறாமல், தர்மம் அதை மீராமல்,

நெஞ்சில் வீரமெனும் வேல் பதித்து!

புறமுதுகு காட்டாமல், யாரையும் தூற்றாமல்,

பண்பெனும் வால் எடுத்து, அதை அன்பெனும் உறையிலிட்டு!

கொடுத்த வாக்கதை நிறைவேற்ற, நொண்டி சாக்கேதும் சொல்லாமல்,

வாய்மையை தினம் மதித்து!

சான்றோர் காட்டிய வழியிலே, கற்களைப் பாராமல்,

முட்களை மிதியாமல், இலக்கை நோக்கி காலெடுத்து வைத்தால்.....

அன்று மாறும் நம் தலையெழுத்து,

என்று தயக்கமின்றி இடுகிறேன் கையெழுத்து!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

—————

என் புத்தனே

09/06/2012 15:42

இத்தனைத் தீமையை,

இனி எத்தனை காலம்?

ஒரு பித்தனைப் போன்று,

சகிக்க வேண்டும் என் புத்தனே?

 

     

 

 

—————

பார் தமிழா

06/06/2012 20:48

 

பார் தமிழா (உலகத் தமிழா)

கண்ணைத் திறந்து பார் தமிழா!

உன்னையல்லாமல் மொழியைக் காப்பற்றுபவர் யார் தமிழா!

நீ பாராவிட்டால் எல்லாம் வீண் தமிழா!

உன் இனத்தின் அழிவைப் பார் தமிழா!

அதைக் கொஞ்சம் தட்டிக் கேள் தமிழா!

பயன் தராவிட்டால் அதட்டிக் கேள் தமிழா!

நம் மனம் பால் தமிழா!

அதனால் போனது நம் வாழ்க்கை பாழ் தமிழா!

வந்தவர்க்கெல்லாம் கொடுத்தோம் தோள் தமிழா!

பின்னர் உரித்தெடுக்கப்பட்டது நம் தோல் தமிழா!

நமக்குண்டு உயர்ந்த பண்பாடு தமிழா!

ஆனால் நாம் பட்டதோ உலகில் பெரும்பாடு தமிழா!

தீமையைக் கண்டு பொங்கி எழு தமிழா!

வீரம் கொண்டு விளையாடு தமிழா!

விவேகத்துடன் உறவாடு தமிழா!

தமிழுக்காகப் போராடு தமிழா!

வெற்றி வரும் உன்னோடு தமிழா!

மலர்மாலை வரும் பின்னோடு தமிழா!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

—————

மலரட்டும் தமிழீழம்!

06/06/2012 20:46

தாய் தமிழ்ச் சொந்தங்கள் கண்முன்னே இறந்தனர் துடித்து!

அதனைக் கண்ட தமிழர் உள்ளமோ வெடித்து!

இச்சோக அவல நிலையை நினைத்து!

மக்களெல்லாம் மழை மழையாய் கண்ணீரை வடித்து!

சுயம், பயம் என்ற மதிலை இடித்து!

மெத்தனத்தையும் அலட்சியத்தையும் விட்டொழித்து!

எழுந்தனர் உறக்கத்திலிருந்து விழித்து!

அறிவுபூர்வமான திட்டங்கள் பல வகுத்து!

அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாக அதை தொகுத்து!

மாற்றப்பட வேண்டும் ஈழத்தமிழரின் தலையெழுத்து!

அதையே இலக்காய் கொண்டனர் உலகத்தமிழர் அடுத்து!

அதற்கு உள்ளத்தில் உரமேற்றினர் சபதம் எடுத்து!

நம்புங்கள் அதற்கு கைகொடுக்கும் நம் தமிழ் எழுத்து!

என்று எழுதுகிறேன் மங்களமாய் ஈழம் மலருமென முடித்து!

 

ஆக்கம்,

பா.சந்திரன்

 

 

—————